தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் டாப் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து வந்ததால் வெகுவிரைவிலேயே இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென தனது சம்பளத்தை அதிகரித்துக் கொண்டும் நடித்தார்.
இருப்பினும் இவரது கவர்ச்சி மற்றும் திறமையின் காரணமாக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டிபோட்டுக்கொண்டு பட வாய்ப்பை அள்ளி கொடுத்தனர். இப்படி வெற்றிகரமாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருந்த இவர் திடீரென தனது நண்பரும் தொழிலதிபருமான கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு சரியாக சினிமாவில் நடிக்காமல் தனது ஆசையை கணவருடன் ஹனிமூன் சென்று உல்லாசமாக இருந்தார். அப்பொழுது பிக்னிக் டிரஸ் மற்றும் குட்டையான உடைகளில் இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி ரசிகர்களையும் சந்தோஷம் படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது திருமணத்திற்குப் பிறகு அதிரடியாக ஆடையை குறைத்துக் கொண்டு தான் சமீபகாலமாக சுற்றித் திரிகிறார்.
சினிமாவில் நடிப்பதையும் தாண்டி வெப்சீரிஸ் பக்கங்களிலும் தற்போது தலை காட்டி அசத்துகிறார் காஜல் அகர்வால். இப்போது தெலுங்கில் இவர் நாகார்ஜுனாவுடன் கைகோர்த்து கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஆனார் அதற்குள் காஜல் அகர்வால் கர்ப்பம் ஆகி விட்டதால் தற்போது தயாரிப்பாளரிடம் தான் இவ்வாறு இருப்பதாக கூறி அந்த படத்தில் இருந்து வெளியேறி உள்ளார்.
இதனை அடுத்து அந்த படத்தில் நாகார்ஜூனா ஜோடியாக இலியானா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் தற்போது இந்த படத்தில் நடிக்கவில்லை அவருக்கு பதிலாக காஜல் அகர்வால் கதாப்பாத்திரத்தில் தமன்னாவை நடிக்க வைக்க படக்குழு தற்போது பேசி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.