தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா திடீரென அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஊ ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஆடி அசத்தினார்.
இந்த படத்தில் அந்த பாடலில் பார்க்கவே தற்போது ரசிகர்கள் கூட்டம் திரையரங்கை நாடுகின்றன. அந்த அளவிற்கு இந்த பாடல் தற்போது மக்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகி உள்ளது. யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களில் ஒன்று இந்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் கதைக்கு ஏற்றவாறு இந்த பாடலும் செம சூப்பராக பொருந்தியதால் படமும் ஒருபக்கம் நல்லதொரு வெற்றியை அடைந்தது. இந்த படத்தின் சக்சஸ் பார்ட்டி கூட அண்மையில் நடந்தது. அப்பொழுது நடிகர் அல்லு அர்ஜுன் ஊ ஊ சொல்றியா மாமா பாடல் குறித்து மற்றும் சமந்தா குறித்தும் பேசி இருந்தார்.
அவர் சொன்னது : சக்சஸ் பார்ட்டியில் சமந்தாவுக்கு நன்றி தெரிவித்தார். என் மீது நம்பிக்கை வைத்து இந்த பாடலுக்கு ஆடுனீர்கள் செட்டில் உங்களுக்கு எவ்வளவு சந்தேகம் வந்தது என்று எனக்கு தெரியும். இது சரியா தவறா என பல சந்தேகங்கள் உங்களுக்கு வந்தது.
நான் சொன்ன ஒரே ஒரு வார்த்தை செய்யுங்கள் என்றேன் அதன் பிறகு ஒரு கேள்விகூட கேட்கவில்லை எங்களை நம்புவீர்கள் அதற்கு உங்களுக்கு பெரிய நன்றி என் வார்த்தையை நம்பி என் இதயத்தையும், என் மரியாதையையும் வென்று விட்டீர்கள் யூடியூபில் உங்களது பாடல் தான் உலக அளவில் நம்பர் ஒன் பாடலாக இருக்கிறது வாழ்த்துக்கள் சாம் என கூறினார்.