டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து அதிரடியாக உடல் எடையைக் குறைத்த நடிகர் சிவகார்த்திகேயன் என்ன காரணம் தெரியுமா.? சொன்ன ஷாக்காவிங்க..

sivakarthikeyan
sivakarthikeyan

திரை உலகில் ஆரம்பத்தில் காமெடி கலந்த படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் ஆக்சன் திரைப்படங்களிலும் நடித்தார் அது அவருக்கு பேரையும் புகழையும் அதிகமாக பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் அவரது படங்கள் வசூல் வேட்டை நடத்த மிகப்பெரிய ஒரு ஆதாரமாக இருந்தது.

அதை உணர்ந்து கொண்ட சிவகார்த்திகேயன் ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த படங்களையே பெரிதும் கொடுத்து வருகிறார். இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் நடிப்பதையும் தாண்டி பல்வேறு திரைப்படங்களை தயாரிப்பதும் இவர் வழக்கமாக வைத்துள்ளார் இதனால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் தமிழ்சினிமாவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் டாக்டர். படத்தை எடுத்த  படக்குழுவே எதிர்பார்க்காத அளவிற்கு மாபெரும் வசூல் வேட்டை நடத்தி அசத்தியது. இதுவரை திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது சிவகார்த்திகேயன் சினிமா கரியரில் முதல் முதலாக 100 கோடியை தொட்டு உள்ளதால் அவரும் படக்குழுவும் செம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் டான், அயலான் போன்ற பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி ரெடியாக இருக்கின்றன. அதில் முதலாவதாக டான் திரைப்படம் கிட்டத்தட்ட படத்தின் சூட்டிங் முடிவடையும் நிலையில் உள்ளது இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கல்லூரி மாணவனாக நடிப்பதால் உடல் எடையை அதிரடியாக எடையை குறைத்துள்ளார்.

மேலும் இதே படத்தில் ஒரு சிறு பள்ளி மாணவன் கதாபாத்திரத்திலும் சிவகார்த்திகேயன் வந்து போவதால் மீண்டும் கடுமையாக உடல் எடையை குறைத்து உள்ளதாக தெரியவந்துள்ளது. விக்ரம், சிம்பு ஆகியோர்களை தொடர்ந்து உடல் எடையை குறைத்து ஏற்றுவதை தற்போது செய்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.