தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருவர் தல அஜித். சமிபகாலமாக தொடர்ந்து சிறப்பான இயக்குனர்களிடம் கதை கேட்டு நடித்து வருகிறார். அந்த வகையில் சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்து அஜித் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டு தான்.
அதிலும் கடைசியாக விசுவாசம் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அஜித்துக்கு பேரையும், புகழையும் பெற்றுக் கொடுத்தது மேலும் இந்த திரைப்படம் பல நாட்கள் ஓடியது. மேலும் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது. இந்தப் படத்தில் அஜித்துடன் கை கோர்த்துள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மலையாள குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்தர், விவேக், ரோபோ சங்கர், தம்பி ராமையா போன்ற பலர் நடித்து அசத்தி இருந்தனர். இந்த படம் மக்கள் மற்றும் ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் புகழ்ந்து பேசியதோடு அஜித் கேரியரில் இது ஒரு பெஸ்ட் படம் என கூறினார்.
அவர்களை போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தை பார்த்து கண்டுகளித்தார் பின் அவர் தனது மகள் சவுந்தர்யா துவக்கி உள்ள ஹிட்ஆப்- ல் பேசியுள்ளார் அவர் அதில் கூறியது: விசுவாசம் படம் இவ்வளவு ஹிட் ஆகுறதுக்கு என்ன காரணம்னு பார்க்க படத்தை பார்த்தேன்.
படம் போகப்போக கிளைமாக்ஸ் வரவர பார்த்துகிட்டே போனேன் என்னை அறியாமலேயே கைதட்டினேன் சூப்பர் படம் என கூறியிருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தை புகழ்ந்து பேசிய பின் சிவாவையும் புகழ்ந்து பேசி தான் பிறகு அவருக்கு அடுத்த தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுத்ததாக தெரிய வருகிறது.