திடீரென மாறுவேடத்தில் சுத்திய நடிகை சாய் பல்லவி என்ன காரணம் தெரியுமா.?

saipallavi
saipallavi

தமிழ் சினிமாக்களில் தலைகாட்டி பின் மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் குடியேறியவர் நடிகை சாய் பல்லவி இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு தென்னிந்திய திரை உலகம் முழுவதும் வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தன.

அதிலும் குறிப்பாக தமிழில் எடுத்தவுடனேயே தனுஷின் மாரி 2, சூர்யாவின் என் ஜி கே ஆகிய படங்களில் ஹீரோயின்னாக நடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை இந்த நிலையில் அவருக்கு தெலுங்கு சினிமா வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது.

தொடர்ந்து சாய்பல்லவி அங்கு நடித்து வெற்றி படங்களை கொடுத்து வலம் வருகிறார் இப்பொழுது கூட இவர் நடிகர் நானி உடன் கைகோர்த்து ஒரு படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் வேறு எதுவும் இல்லை ஷியாம் சிங்கா ராய் படம் தான். படத்தில் நானி சாய்பல்லவி ஆகியோருடன் இணைந்து இளம் நடிகை கீர்த்தி ஷெட்டியும் நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் எதிர்பார்த்தபடி நன்றாக இருப்பதால் நடிகை சாய் பல்லவி இந்த படத்தை கண்டு உள்ளாராம். நடிகை சாய்பல்லவி ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபல திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் இணைந்து மாறுவேடத்தில் படத்தை கண்டு ரசித்து உள்ளார்.

வேறு யாரும் அடையாளம் காணாதபடி இவர் மாறுவேடத்தில் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது இதோ சாய்பல்லவி மாறுவேடத்தில் இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

saipallavi
saipallavi