ரஜினி, கமல், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் நிஜ பெயர் என்ன தெரியுமா.?

Rajini
Rajini

சினிமா உலகிற்காக தனது நிஜப் பெயரை மாற்றி ஸ்டைலாக வைத்துக் கொள்வது அந்த காலம் முதல் இந்த காலம் வரை நடைமுறையில் இருக்கின்றன..இந்த நிலையில் நமக்கு ரொம்ப பிடித்த சில முக்கிய நடிகர்களின் நிஜ பெயர் என்னவென்று பார்க்கலாம் வாங்க..

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைத்திருக்கும் ரஜினியின் சொந்த ஊர் பெங்களூர், இவரது தந்தை போலீஸ் கான்ஸ்டபிள், தாயார் குடும்பத் தலைவி ரஜினிக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் சிவாஜி ராவ் கைக் வாட், கே பாலச்சந்தர் அபூர்வராகங்கள் படத்தின் டைட்டில் கார்டில் ரஜினிகாந்த் என பெயர் போட்டார் அதுவே பிறகு எல்லோருக்கும் பிடித்ததாக மாறிவிட்டது.

உலகநாயகன் கமலஹாசன் பரமக்குடியில் பிறந்தவர் இவரது தந்தை வக்கீல், தாயார் குடும்பத் தலைவி இவருக்கு பெற்றோர்கள் பார்த்தசாரதி என்று பெயர் வைத்ததாக ஒரு பேட்டியில் கமலஹாசனே கூறியிருந்தார்..

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா சினிமாவின் ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாமல் வந்திருந்தாலும் தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் ரசிகைகளின் கனவு கண்ணனாகவும் வலம் வருகிறார்.. இவருக்கு சிவகுமார் வைத்த பெயர் சரவணன் பிறகு இயக்குனர் மணிரத்தினம் தான் சூர்யா என்ற பெயரை மாற்றினார் எனக் கூறப்படுகிறது..

கமலஹாசனுக்கு பிறகு கெட்டப்புகளில் பெயர் போனவர் விக்ரம் இவரது நிஜப்பெயர் கென்னடி ஜான் விக்டர் இந்த பெயர் ரொம்ப நீளமாக இருப்பதால் அதனை விக்ரம் என மாற்றிக்கொண்டார்..

சினிமா உலகில் பல வித்தைகளை கையில் வைத்திருப்பவர் தனுஷ் இவரது நிஜ பெயர் வெங்கட்ராஜ் பிரபு என சொல்லப்படுகிறது.. ஹீரோ வில்லன் நடிகரான பிரகாஷ்ராஜின் நிஜ பெயரும் பிரகாஷ் ராய் ஆகும். கே பாலச்சந்தர் படத்தில் அறிமுகமான போது பிரகாஷ்ராய் என்ற பெயரை பாலச்சந்தர் பிரகாஷ்ராஜ் என்று மாற்றி விட்டாராம்