முதல் முறையாக அதிக ரேட்டிங் எடுத்த சிம்புவின் படம்- “மாநாடு” எவ்வளவு ரேட்டிங் தெரியுமா.? ரேட்டிங்கில் ஜெய்பீம் படத்தை முந்தியதா..

simbu-and-surya
simbu-and-surya

தமிழ் சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் சிம்பு நடித்து உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இதுவரையிலும் இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள திரைப்படம் “மாநாடு” இந்த திரைப்படம் முற்றிலும் டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது இந்த படத்தை வேறு ஒரு தளத்தில் வெங்கட்பிரபு எடுத்திருந்தார்.

அதேசமயம் மக்களுக்கு எளிதில் புரியும்படியும் இந்த திரைப்படம் அமைந்துள்ளதால் மாநாடு திரைப்படத்தை பார்க்க மக்கள் மற்றொரு ரசிகர்கள் கூட்டம் திரையரங்கை நாடியுள்ளது. முதல் நாள் ஓரளவு நல்ல வசூலைப் பெற்ற நிலையில் அடுத்த நாளும் சூப்பரான வசூலை அள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்பட விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது வழக்கமான சிம்புவை இந்த படத்தில் பார்க்க வில்லை என்றாலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு சரியாக புரிந்து நடித்து உள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த திரைப்படம் பிரபல ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி தளம் இந்த படத்திற்கு அதிக ரேட்டிங்கை கொடுத்து அசத்தி உள்ளது சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படமும் அதிக புள்ளிகள் பெற்று 9.5 ரேட்டிங்கில் கிடைத்த அசத்தியது தற்போது ஜெய்பீம் படத்திற்கு  இணையாக மாநாடு திரைப்படமும் 9.5 புள்ளிகள் பெற்று அசத்தி உள்ளது.

இதுவரை சிம்புவின் படங்கள் ரேட்டிங்கில் அதிகரித்ததே கிடையாது ஆனால் முதன்முறையாக பிரபல தளமான ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி 9.5 ரேட்டிங்கை மாநாடு படத்திற்கு கொடுத்து உள்ளது. சிம்பு ரசிகர்கள் கொண்டாட செய்துள்ளது.