மெண்டல் போல் பொருளை தூக்கி போட்டு உடைத்த குயின்சி… சாட்டையை எடுத்து சுழற்றிய பிக்பாஸ் என்ன தண்டனை தெரியுமா.?

bigg-boss-066
bigg-boss-066

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது மேலும் இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து ஏராளமான சண்டை சச்சரவுகள் இருந்து வரும் நிலையில் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில் கதிரவன் மீது இருக்கும் கோபத்தில் குயின்சி பிக்பாஸ் வீட்டில் உள்ள பொருட்களை உடைக்கிறார்.

இதற்கு பிக்பாஸ் தண்டனை கொடுத்துள்ள நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டில் தற்பொழுது நீதிமன்ற டாஸ்க் மிகவும் பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் குயின்சி கதிரவனுக்கு இடையே தரமான சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சண்டையில் குயின்சி கோபத்தில் பிக்பாஸ் வீட்டில் உள்ள பொம்மையை போட்டு உடைக்கிறார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட பிறகு அதனை எடுத்து பிக்பாஸ் குயின்சியை அழைத்து நீங்கள் இந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு கேமரா முன் சென்று இனிமேல் பிக்பாஸ் விட்டு பொருட்களை உடைக்க மாட்டேன் என மன்னிப்பு கேளுங்கள் என்று கூறுகிறார் மேலும் இந்த வாரம் கேப்டனாக இருந்து வரும் மைனாவிடம் குயின்சி சரியாக அனைத்து கேமரா முன்பும் மன்னிப்பு கேட்கிறாரா என்று நீங்கள் பார்க்க வேண்டும் என கூற இது குறித்த ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சி தற்பொழுது 15 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது மேலும் இந்த வாரம் முதன் முறையாக ஓபன் நாமினேஷன் நடைபெற்று இருந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. மேலும் இந்த வாரம் 7 பேர் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் அதில் மணிகண்டா மிகவும் குறைவான வாக்குகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

மணிகண்டா நடிகை ஐஸ்வர்யாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது எனவே ஐஸ்வர்யா தொடர்ந்து தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என சிபாரிசு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.