சினிமாவுலகில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் போன்ற பல நட்சத்திரங்கள் சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள்தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதுபோல சின்னத்திரையில் இருந்து தற்போது நடிகர், நடிகைகளை தொடர்ந்து இசையமைப்பாளர்கள், டான்ஸ் மாஸ்டர் போன்ற பலரும் வெள்ளித்திரையில் பயணித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் மூலம் பிரபலமடைந்து தற்போது வெள்ளித்திரையில் கால் தடம் பதித்துள்ளார் பாடகர் பூவையார்.இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 இல் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் பூவையார்.
இதை தொடர்ந்து அவ்வபொழுது விஜய் டிவி பக்கம் தலை காட்டி வந்த பூவையருக்கு 2019ஆம் ஆண்டு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்தது இவர் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து பிகில் திரைப்படத்தில் வெறித்தனம் பாடலை பாடியதோடு மட்டுமில்லமால் அதில் நடித்து இருந்தார் மேலும் தற்பொழுது இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.
இதனால் இவர் மேலும் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் தற்பொழுது சம்பாதித்தும் வருகிறார் அந்த வகையில் தற்போதைய பூவையாரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம்
சென்னையில் இவர் சொந்தமாக ஒரு ஃபிளாட் மற்றும் சொந்தக்காரர் வைத்துள்ளார் மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பூவையருக்கு 4 லட்சத்தில் சொந்த வீடு இருக்கிறது இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிக்காட்டி இதன் மூலம் மூன்றாம் பரிசாக 10 லட்சத்தை வென்றார்.
மேலும் தனது இசை திறமையின் மூலம் 20 லட்சம் ரூபாய் சம்பாதித்து வைத்துள்ளார் இந்த தகவல் அதிகாரபூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது பிரபல தளம் வெளியிட்ட தகவலை நாங்கள் உங்களுடன் பகிர்ந்து உள்ளோம்.