Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் மொத்தமாக அவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் விருதகிரி படத்திற்கு பிறகு அரசியலில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தனது கட்சியை முன்னேற்ற பாதையிலேயே கொண்டு சென்றார்.
முதலில் எம்எல்ஏவாக விஜயகாந்த் அரியணை ஏறினார் அதன் பிறகு எதிர்க்கட்சி தலைவராக மாறினார். கட்சியை நல்லபடியாக வளர்த்து வந்த விஜயகாந்துக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் ஓய்வு எடுத்து வந்தார். விசேஷம் மற்றும் முக்கிய நாட்களில் மட்டுமே தன்னுடைய தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை பார்த்து வந்த விஜயகாந்த்..
அண்மையில் தீபாவளியை கூட தனது குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடினார். திடீரென நவம்பர் 18 தேதி ரொம்ப முடியாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது இதை அறிந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்த் இதிலிருந்து மீண்டு வர வேண்டும் என கூறி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்தின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதன்படி பார்க்கையில் 2023 விஜயகாந்தின் சொத்து மதிப்பு சுமார் 38 கோடி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. விஜயகாந்த் மற்றும் அவர் குடும்பத்தினர் தற்பொழுது மதுரை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் தங்கி வருகின்றனர் மாமண்டூரில் இருக்கும் சொத்து மதிப்பு சுமார் 4.25 கோடி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பருத்திவீரன் படம் : கார்த்தி ஒருவரால் ஹிட் அடிக்கவில்லை – உண்மையை உடைத்த கஞ்சா கருப்பு
மேலும் விஜயகாந்த் ரொம்ப விலை உயர்ந்த சொகுசு கார்கள் இருக்கிறது. Audi Q7 – 87 லட்சம், டொயோட்டா இன்னோவா crysta – 25 லட்சம், பி எம் டபிள்யூ எக்ஸ் 5 – 96 லட்சம், mercedes – benz s350 – 1.2 கோடி, ford endeavour – 36 லட்சம், volvo s90 – 66 லட்சம் hyundai santa fe – 27 லட்சம் போன்ற கார்களும் இருக்கிறது. இது அதிகாரபூர்வ தகவல் இல்லை..