நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக பீஸ்ட் திரைப்படம் வெளியாக நிலையில் இந்த படத்தினை வெற்றினை தொடர்ந்து தற்பொழுது இவர் வாரிசு திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தினை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது மேலும் தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தமன் அவர்கள் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் ஆந்திராவில் இந்த படம் வெளியிடக் கூடாது என எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதன் காரணமாக நேற்று நடிகர் விஜய் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை பனையூரில் சந்தித்து பேசி இருந்தார் கடந்த ஐந்து வருடங்களாக கொரோனா மற்றும் தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து வந்ததன் காரணமாக பெரிதாக ரசிகர்களை சந்திக்க முடியவில்லை எனவே தற்போது வாரிசு பாடப் முடிந்த நிலையில் நேற்று ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.
நடிகர் விஜயை சந்திப்பதற்காக பல்லாயிரம் கணக்கான ரசிகர்கள் குவிந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பு படை காவலில் அமைக்கப்பட்டிருந்தது மேலும் தன்னை பார்க்க வந்த ரசிகர்களுக்காக நடிகர் விஜய் பிரியாணி விருந்தை வைத்திருந்தார். மேலும் நடிகர் விஜய் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து பேசும் பொழுது திரைப்படம் வெளியாகும் பொழுது எப்படி ரசிகர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார்.
அதில் நடிகர் விஜய் அனைவரும் தங்களுடைய குடும்பத்தை நல்லபடியாக பார்த்து க்கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய பேனருக்கு பால் அபிஷேகம் செய்யக்கூடாது எனவும் வலியுறுத்தி உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது நடிகர் விஜய் அணிந்திருக்கும் வெள்ளை சட்டையின் விலை வெளியாகி உள்ள நிலை ஏன் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது நடிகர் விஜய் அணிந்திருந்த சட்டையின் பிராண்ட் BURBERRY என்ற நிறுவனத்துடையது. மேலும் சமீபத்தில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை தொடங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அணிந்திருந்த டி- ஷர்ட்டும் BURBERRY என்ற பிராண்ட் வகை தான். அதன் விலை 40 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் BURBERRY கிராண்ட் வகை வெள்ளை சட்டையை தான் நடிகர் விஜய்யும் அணிந்திருந்தார். அந்த வகையில் இந்த ஷார்டின் விலை 32 ஆயிரத்து 790ரூபாய் என்று கூறப்படுகிறது.