கடந்த சில வருடங்களாக நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் தான் தனுஷ் இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெறுவதால் இவருக்கு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்து கொண்டே போகிறது.
அந்த வகையில் பார்த்தால் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்ததாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது அதேபோல் தனுஷ் தற்போது ஆங்கில திரைப்படத்தில் நடிப்பதற்காக வெளிநாட்டில் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் அப்பொழுது ஓய்வு கிடைக்கும் நேரமெல்லாம் தனது மனைவி மற்றும் மகன்களுடன் வெளிநாட்டில் ஊர் சுற்றியும் வருவாராம் அந்த வகையில் தனுஷ் சமீபத்தில் ஆங்கில படப்பிடிப்பை முடித்த பிறகு சென்னை திரும்பியுள்ளார்.
மேலும் இவரது நடிப்பில் தமிழில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாள் விழாவிலும் கலந்து கொண்டார் அப்பொழுது கூட அந்த புகைப்படங்களை நாம் பார்த்திருக்கலாம்.
இந்நிலையில் தனுஷ் வளர்க்கும் நாய் குட்டிகளை பற்றி ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது தமிழ்சினிமாவில் பணியாற்றி வரும் பல பிரபலங்களும் நாய்க்குட்டிகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.அந்த வகையில் பார்த்தால் நிறைய பிரபலங்கள் தங்களது வீட்டில் செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்கள்.
அதேபோல் தனுசும் இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார் இந்த இரண்டு நாய்களையும் வெளிநாட்டிலிருந்து தனுஷ் வாங்கியதாகவும் இந்த நாய்க் குட்டிகளின் விலை சுமார் 1.5 லட்சத்திற்கும் மேலாக இருக்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் தனுஷ் இந்த நாய்க் குட்டிகளை லட்சக்கணக்கில் வாங்கினாரா என ஆச்சரியப்பட்டு இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.