கலாநிதி மாறன் நெல்சனுக்கு கொடுத்த PORSCHE காரின் விலை என்ன தெரியுமா.? ஷாக்கான ரசிகர்கள்

Nelson
Nelson

Nelson Dilipkumar : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 4000 -த்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. ரஜினியுடன் இணைந்து முக்கிய இடத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி..

மாரிமுத்து, கிஷோர், தமன்னா, சுனில், மோகன்லால், சிவராஜ் குமார், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் அனைத்து இடங்களிலும் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது இதுவரை மட்டுமே ஜெயிலர் படம் வெளியாகி சுமார் 605 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் தயாரிப்பு நிறுவனத்திற்கு சுமார் 200 கோடிக்கு மேல் லாபம் எனவும் கூறப்படுகிறது இந்த நிலையில்  தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிக்கு செக் மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 சீரிஸ் காரையும் பரிசாக கொடுத்தார் அதனைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சனை சந்தித்து செக் மற்றும் PORSCHE காரை கொடுத்தார்.

அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கங்களில் வைரலாகி வந்த நிலையில் தற்போது அந்த காரின் மதிப்பு குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி கலாநிதி மாறன் அவர்கள் நெல்சனுக்கு கொடுத்த PORSCHE காரின் விலை சுமார் 1.40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் நெல்சன் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட்டடித்து விட்டால் படத்தில் நடித்த ஹீரோ மற்றும் இயக்குனருக்கு கொடுப்பது வழக்கம் அந்த வகையில் தற்போது நெல்சனுக்கு இந்த கார் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதோ அந்த அழகிய வீடியோவை நீங்களே பாருங்கள்.