சினிமா, மாடலிங் என இரண்டிலும் ஒரு காலகட்டத்தில் கலக்கி கொண்டு வந்தவர் நடிகை ஐஸ்வர்யாராய் இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இருவர் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பாலிவுட் பக்கம் சென்றார்.
அங்கு தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்ததால் ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திரங்களுடன் கைகொடுத்தார் மேலும் தனது அழகுக்கு ஏற்றவாறு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு படங்களில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றார்.
அதன் காரணமாக இவரது பயணம் உச்சத்தில் எகிறியது அன்றிலிருந்து இன்றுவரை அந்த உச்சத்திலேயே பயணித்துக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக சிறப்பான கதைகள் வரும்பொழுது அதை தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதுவரை பல்வேறு மொழிகளில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.
தமிழில் இவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்படி சினிமா உலகில் ஓடிக்கொண்டிருந்த ஐஸ்வர்யாராய் கடந்த 2007ஆம் ஆண்டு அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு மகள் இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யாராய் திருமணம் செய்து கொள்ளும் போது அவர் அணிந்திருந்த உடையின் மதிப்பு குறித்து தற்போது வெளியாகி உள்ளது அவர் அணிந்திருந்த உடையின் விலை மட்டுமே 75 லட்சமாம். அந்த உடையில் திருமண கோலத்தில் செம அழகாக இருக்கும் ஐஸ்வர்யாராயின் கியூட் புகைப்படம் இதோ.