சின்னத்திரையில் டாப் நடிகையாக இருப்பவர் ஆலியா மனசா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானவர். முதல் சீரியலே அவருக்கு மாபெரும் வரவேற்பை கொடுத்தது ஆல்யா மனசாவின் நடிப்பு மற்றும் அழகு ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து சோசியல் மீடியாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை ஈர்த்தார்.
ஆலியா மனசா சீரியலில் நடிப்பதை தவிர சில முக்கிய நிகழ்ச்சிகளில் செம்மையாக டான்ஸ் ஆடியும் அசத்துபவர். இவர் ராஜா ராணி சீரியலில் நடித்து வரும்போது அவருக்கு ஜோடியாக நடித்து வந்த சஞ்சீவ்வை காதலித்து இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டனர் திருமணம் முடிந்த உடனடியாக சஞ்சீவ் மற்றும் ஆலியா ஜோடிக்கு ஐலா என்ற மகள் பிறந்தார்.
பின்பு சிறு இடைவேளைக்கு பிறகு ராஜா ராணி சீசன் 2 தொடரிலும் கதாநாயகியாக நடித்தார். சீரியலில் என்ட்ரி ஆகி சில மாதங்களிலேயே ஆலியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் இந்த சீரியலை விட்டு விலகி உள்ளார். அவருக்கு பதில் வேறு ஒரு பிரபலம் தற்போது நடித்து வருகின்றனர்.
மேலும் அண்மையில் ஆல்யா சன் டிவியில் ஒரு சீரியலில் நடிக்க உள்ளார்.. எனவும் தகவல் வெளி வருகின்றன. இதுபோக சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் youtube சேனல் ஒன்று நடத்தி அதன் மூலம் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஐலாவை வைத்து பல வீடியோக்கள் எடுத்து அதனை youtube இல் பதிவிட்டு என்னற்ற பாலோவஸ்களைக் கொண்டுள்ளனர்.
ஆலியா இது தவிர விளம்பரங்களிலும் நடித்து நாலா பக்கமும் காசு பார்த்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் ஆலியா மானசாவின் முழு சொத்து மதிப்பு குறித்த விவரம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதன்படி பார்க்கையில் ஆல்யாவின் சொத்து மதிப்பு சுமார் நாளிலிருந்து ஆறு கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது