நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தெலுங்கு சினிமா மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது பல மொழிகளிலும் இவருக்கான வரவேற்பு சிறப்பாக இருக்கிறது. அந்த வகையில் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து தமிழில் அதிக படங்களை கைப்பற்றி நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் தெலுங்கு பக்கமே சென்றார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் ரசிக்கும் படி அமைந்தது. அதனால் இந்த படத்தை தொடர்ந்து தற்போது பல படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.
சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது இந்த படத்திலும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்று அதிக அளவு வசூலை அள்ளிய நிலையில் இரண்டாம் பாகமும் பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படி படங்கள் ஒரு பக்கம் இருக்கின்ற நிலையில் மறுபக்கம் ரசிகர்களை கவரும் படியான கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்த வண்ணமே இருக்கிறார். இதன் மூலம் சமூக வலைதளங்களில் எண்ணற்ற ரசிகர்களை தக்க வைத்து கொண்டுள்ளார்.
இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்களின் கனவு கண்ணியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளிவந்துள்ளது. இந்த வருட கணக்கின்படி இவரது சொத்து மதிப்பு 45 இல் இருந்து 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் இந்த செய்தி சமூக வலைதளங்களில் தற்போது தீயாய் பரவி வருகின்றனர்.