Arjun sarja : ஆக்சன் கிங் அர்ஜுன் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வெற்றிகளை அள்ளி உள்ளார் முதலில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு “யார்” படம் நல்ல வரவேற்பு பெற்று தந்தது.
அதன் பிறகு இவர் நடித்த ஜென்டில்மேன், ஜெய் ஹிந்த், மேட்டுப்பட்டி மிராசு, ரிதம், வானவில், வேதம் போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தது தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் இயக்குனராகவும் பல படங்களை இயக்கியுள்ளார்.
அதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் சிங்கராகவும் இவர் பல படங்களுக்கு பாடி உள்ளார் குறிப்பாக அவர் நடித்த ஜெயசூர்யா, பரசுராம், ஜெய்ஹிந்த் போன்ற படங்களில் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கி வந்த அர்ஜுன் பெரிதும் தேசப்பற்று உடையவர்.
இப்படிப்பட்ட அர்ஜூன் சமீபகாலமாக நடித்த சில படங்கள் தோல்வி படங்களாக மாறியது இதிலிருந்து மீண்டு வர நல்ல கதை அம்சம் உள்ள படங்களை நடித்துள்ளார். அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “லியோ” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மேதாவி, தலைவர் 170, தீயவர் குலைகள் நடுங்க மற்றும் சில படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
இந்த நிலையில் அர்ஜுன் சொத்து மதிப்பு குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் படி அவருடைய சொத்து மதிப்பு சுமார் 80 கோடி இருக்கும் என கூறப்படுகிறது ஒரு படத்திற்கு சுமார் 5 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது அவரிடம் பிஎம்டபிள்யூ ஐ 8, ஆடி கார் போன்ற ரகங்களை வைத்திருக்கிறார்.