முத்து படத்தில் மரத்தடியில் அமர்ந்திருந்த ஜமிந்தார் கதாபாத்திரத்தின் பெயர் என்ன தெரியுமா.! பல வருடம் கழித்து உண்மையை கூறிய கேஎஸ் ரவிக்குமார்.!

muthu
muthu

தமிழ் சினிமாவில் பெரிய இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் கேஎஸ் ரவிக்குமார். இவர் இயக்கத்தில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது அதிலும் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படத்தை இயக்கியுள்ளார்.

பெரும்பாலும் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்களும் வணிகரீதியாக வெற்றி பெற்றுள்ளன. அதே போல் தான் இயக்கும் திரைப் படங்களில் ஒரு காட்சியிலாவது கேஎஸ் ரவிக்குமார் நடித்திருப்பார் இது வழக்கமான ஒன்றுதான். கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் நாட்டாமை, நட்புக்காக, அவ்வைசண்முகி படையப்பா, முத்து, வில்லன், வரலாறு, தசவதாரம் என பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் இவர் இயக்கிய பல திரைப்படங்கள் ஹிட் திரைப்படங்கள் தான் இந்தநிலையில் 1995 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் முதன்முறையாக ரஜினியுடன் கைகோர்த்த திரைப்படம்தான் முத்து இந்த திரைப்படம் வெளியாகி நாம் நினைத்ததை விட நல்ல வசூல் வேட்டை நடத்தியது. அதேபோல் இந்த திரைப்படத்தில் ரஜினி அப்பா-மகன் என்ற இரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இதில் மகனின் கதாபாத்திரத்தின் பெயர் முத்து எனவும் ஜமீன்தாராக வரும் ரஜினியின் பெயர் யாருக்கும்தெரியாமல் இருந்து வந்தது.

இந்தநிலையில் கேஎஸ் ரவிக்குமார் சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி ஒன்றை சமூக வலைதளத்தின் மூலம் கொடுத்துள்ளார். அந்தப் பேட்டியில் கேஎஸ் ரவிக்குமார் கூறியதாவது. முத்து படத்தில் ஜமீன்தார் கதாபாத்திரமாக வரும் ரஜினிக்கு எந்த ஒரு பெயரும் கிடையாது என்ன பெயர் என்பதே எனக்கு ஞாபகம் இல்லை  அதைப் பற்றி எழுதும் பொழுது ஜமீன்தார் என்று தான் எழுதினேன் கேஎஸ் ரவிக்குமார் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பெரியவருக்கு சினிமாவில் பெயரே வைக்கவில்லையாம் ஜமீந்தார் என்று தான் அழைத்தார்களாம்.

muthu
muthu