முத்து படத்துல்ல ஜமீன்தாராக வரும் ரஜினியின் பெயர் தெரியுமா.? இந்த வீடியோ பாருங்க.

rajini
rajini

Do you know the name of Rajini who will be the landlord of Muthu Flim : சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் என்றால் நாம் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் கே எஸ் ரவிகுமார் என்று அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த இயக்குனராக தற்போது வரையிலும் காணப்படுகிறார். இவர் தமிழ் சினிமாவிற்கு பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் இவர் பெரும்பாலும் அதிக வெற்றி படங்களை கொடுத்தவர் லிஸ்டில் முதன்மையானவராக காணப்படுகிறார்.

ஒரு சில படங்கள் இவருக்கு தோல்வி படமாக அமைந்துள்ளது.இருப்பினும் அதனை மாபெரும் வெற்றியின் மறைத்தார். இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் கமலஹாசன், ரஜினிகாந்த், அஜீத், விஜய் போன்ற பல நட்சத்திர நடிகர்களை வைத்து இயக்கி அதில் வெற்றி கண்டதன் மூலம் தமிழ் சினிமாவின் உச்சத்திறகே சென்றார் இவர் இயக்குனராக மட்டும் தமிழ் சினிமாவில் பயணிக்காமல் நடிகராகவும் வலம் வந்தார்.

அப்படி சினிமா உலகிற்கு முதலில் இவர் நடிகராக தான் வந்தார் இவர் முதலில் நடித்த ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற திரைப்படத்தில் மோகனுக்கு நண்பனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு நடிகராக அறிமுகமானார் இதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த இவர் அதன் பிறகு இயக்குனராக அறிமுகமானார். இயக்குனராக சிறப்பான கதைகளை இயக்கியை தமிழ் சினிமாவில் தற்போது வரையிலும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் இவர் தற்போது தெலுங்கு படங்களையும் இயக்கி வருகிறார்தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.அதில் அவர் கூறியது நான் முதலில் ரஜினி உடன் 1995ஆம் ஆண்டு படம் பண்ணினேன் அந்த படம் தான் முத்து. திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியதோடு ரஜினி அவர்களுக்கு ஒரு நற் பெயரையும் வாங்கிக் கொடுத்தது.

இந்த படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் மகன் ரஜினியின் பெயர் முத்து என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் ஜமீன்தாராக வரும் ரஜினியின் பெயர் யாருக்கும் தெரியாது என கூறினார் இத்திரைப்படத்தை நீங்கள் பல தடவை பார்த்தாலும் அந்த பெயர் உங்களால் கண்டுப்பிடிக்க முடியாது தெரிவித்துள்ளார். அதை தெரிந்துகள்ள இந்த வீடியோவை பாருங்கள்.