வெள்ளித்திரையில் பிரேமம் என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் தான் அல்போன்ஸ் புத்திரன் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரேமம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் அந்த திரைப்படத்தில் நிவின், பாலி, சாய் பல்லவி, அனுபமா, பரமேஸ்வரன், மற்றும் மடோனா செபாஸ்டியன் போன்ற பல நட்சத்திரங்கள் அதில் நடித்திருந்தனர்.
மேலும் அந்த திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் சாய்பல்லவி அந்த திரைப்படத்திற்குப் பின்பு மலையாளம், தமிழ்,தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
மேலும் அல்போன்ஸ் புத்திரன் அந்தத் திரைப்படத்திற்கு பின்பு எந்த ஒரு திரைப்படத்தைப் பற்றியும் அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்தார் சமிபத்தில் தான் தனது புது படம் குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அடுத்ததாக அல்போன்ஸ் புத்திரன் இயக்கவுள்ள திரைப் படத்திற்கு பாட்டு என்ற தலைப்பை வைத்துள்ளார் மேலும் அந்த படத்திற்காக அவரே இசை அமைக்கிறாராம்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஃபகத் ஃபாசில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம் மேலும் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸடார் நயன்தாரா அந்த திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்க போகிறாராம்.
இதனால் நயன்தாராவின் ரசிகர்கள் ஒரே உற்ச்சாகத்தில் இருக்கிறார்கள்.