சினிமா உலகில் இருக்கும் பெரும்பாலான பிரபலங்கள் தனது படத்தை ஹிட்டடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக என்னென்னவோ செய்கின்றனர் அதிலும் குறிப்பாக தனது படத்தின் இசை வெளியீட்டு விழா போன்றவற்றில் கலந்து கொண்டு பேசி மக்களின் கவனத்தை வெகுவாக தனது படம் பக்கம் விழ வைக்கின்றன. அதிலும் டாப் நடிகர்களான விஜய், கமல், ரஜினி போன்ற பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
ஆனால் இப்பொழுது இருக்கும் முன்னணி நடிகைகள் பலரும் கலந்து கொள்ள மாட்டார்கள் அதற்கு ஏற்றார்போல படத்தின் கதை கேட்கும் முன்பு அதற்கு ஏற்ற மாதிரி பேசிக் கொள்கின்றனர். படத்தில் நடிப்பதை தவிர ஆடியோ பங்ஷன் போன்றவற்றில் கலந்து கொள்ளப்போவதில்லை என சொல்லித்தான் நடிக்கின்றனர்.
அந்த வகையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சினிமா ஆரம்பத்தில் ஆடியோ பங்ஷன் போன்றவற்றில் கலந்து கொண்டு இருந்தாலும் சமீப காலமாக அவர் ஆடியோ பங்ஷனில் கலந்து கொள்வதில்லை. இதை அறிந்த பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் ஆடியோ பங்ஷன் ஒன்றில் நயன்தாராவை மறைமுகமாக சாடிய பேசிய சம்பவம் இணையதள பக்கத்தில் வைரல் ஆனது.
அவர் சொல்வது : நயன்தாரா சமீபகாலமாக ஆடியோ பங்ஷனுக்கு தலை காட்டுவதில்லை இதைக் கேட்டால் நான் அங்கு சென்று வந்து படம் சூப்பர் ஹிட் அடித்து வெற்றிபெற்றால் ஓகே ஆனால் ஆடியோ பங்ஷனுக்கு போய்விட்டு வந்து அந்த படம் தோல்வியை சந்தித்தால் அது நன்றாக இருக்காது அதை மனதில் வைத்து இப்போது நிறைய ஆடியோ பங்ஷனுக்கு செல்வதில்லை இதை கே ராஜன் கூறியிருந்தார்.
மேலும் அவர் பேசியது : நீ கதை கேட்கும்போதே உனக்கு தெரியாதா அந்த படம் வெற்றி பெறுமா பெறாத என்று அப்படி இருக்கும்போது நீ கதை கேட்கின்ற எல்லா படமும் வெற்றி படங்களாக இருக்கும் என்றுதானே நம்பி போகிறாய் அப்படி இருக்கும்போது ஆடியோ பங்ஷனுக்கு நீ போய் தானே இருக்கணும் ஏன் போவதில்லை என கேள்வி எழுப்பினார் ஓடாத படத்துக்கு கோடி கோடியா சம்பளம் மட்டும் வாங்குறீங்க என தாறுமாறாக கிழித்து எடுத்தார்