சென்ற வருடம் தல அஜித் நடித்த விஸ்வாசம் மற்றும் நேற்கொண்ட பார்வை ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது மட்டும்மல்லாமல் வசூல் வேட்டையில் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது என்பது பலருக்கும் தெரியும்.
இதனையடுத்து தல அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் தல அஜித் பைக்கில் வீலிங் செய்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் பார்த்தோம்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தல அஜித்தின் வலிமை படம் குறித்து அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுருந்தார்.
அதில் அவர் வலிமை படத்தின் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு அஜித் குமார் அவர்களும் அனுபவமிக்க தயாரிப்பாளருமான போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து வலிமை படத்தின் அப்டேட் குறித்து முடிவெடத்து தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள்.
முறையான அறிவிப்பு வரும்வரை காத்திருக்கவும் அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும் என அறிக்கை வெளியிட்டுருந்தார்.
இருந்தாலும் தல அஜித் ரசிகர்கள் வலிமை படத்தை பற்றிய அப்டேட் கொடு என கேட்பதை நிறுத்தவில்லை மேலும் வலிமை திரைப்படத்தின் 20 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட உள்ள நிலையில் வலிமை திரைப்படத்தை அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியிடலாம் என படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் சினிமா வட்டாரத்தில் இருந்து கசிந்து வெளிவந்துள்ளது.
தற்பொழுது இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.