நேற்று இந்தியா, நியூசிலாந்து இடையிலான இரண்டாவது 20 ஓவர் போட்டி நடந்தது. முதலில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார் இதனையடுத்து நியூசிலாந்து அணி களம் இறங்கியது. ஆரம்பத்திலேயே அதிரடியை காட்டி ரன்களை உயர்த்திக் கொண்டே சென்றது.
இதனால் நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 190 அல்லது 200 ரன்களை கடைசி வரைக்கும் என கணிக்கப்பட்டது ஆனால் இதில் ஒரு சிம்பிள் பிளான் ஆட்டத்தின் போக்கை மாற்றி அமைத்தது.ஆரம்பத்தில் நியூசிலாந்து என்னதான் அதிரடியை காட்டினாலும் கடைசிவரை 152 ரன்கள் எடுத்து இந்திய அணி நியூசிலாந்து அணியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது எப்படி என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆட்டத்தின் போது ரோகித் சர்மா பந்து வீச்சாளர்களிடம் பேசி வந்தாராம் அப்போது அவர் கூறியது முதல் 2 விக்கெட்டை கைப்பற்றிய போதும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி விடலாம் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும் என பேசிக்கொண்டே வந்தார்கள்.
பவுலர்களும் ரன்கள் போனாலும் பரவாயில்லை விக்கெட் எடுக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் முயற்சி செய்தனர் அவர்கள் எதிர்பார்த்தது. போலவே டிக்கெட்டுகள் ஒருகட்டத்தில் அடுத்தடுத்து சரிய நியூசிலாந்து அணி ஒரு சமயத்தில் ரன் அடிக்க முடியாமல் விக்கெட்டை இழந்து கொண்டே சென்றது ரோஹித்தின் சிம்பிளான பிளான் கடைசியில் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
சும்மாவே ரோகித் மாஸ் காட்டுவார் இப்போ கேப்டன் ஆகிவிட்டதால் தனது திறமையை கொஞ்சம் கொஞ்சமாக காட்டி வெற்றி பெறுகிறார் இவர் இந்திய அணியில் நீண்ட தூரம் பயணித்தால் இந்திய அணி பல்வேறு வெற்றிகளை குவிப்பதோடு மட்டுமல்லாமல் சாதனை படைக்கும் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.