தனுஷ் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வெளியான திரைப்படம் தான் கர்ணன் இந்த திரைப்படம் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே தற்போது வரை நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாகவும் அதிக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
மாரி செல்வராஜ் கூட்டணியில் இணைந்த தனுஷ் இந்த திரைப்படத்தில் கிராமத்து நபர்கள் எப்படி இருப்பார்களோ அதேபோல இந்த திரைப்படத்தில் மாரி செல்வராஜ் பல சினிமா பிரபலங்களை நடிக்க வைத்து காட்டி இருப்பார்.
மேலும் எத்தனை சாதி பிரச்சனைகள் இந்த திரைப்படத்தில் வந்தாலும் அதற்கான விளக்கத்தை உடனுக்குடனே மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.அதிலும் குறிப்பாக தனுஷின் இயல்பான நடிப்பு திறமையை பார்த்து பல சினிமா பிரபலங்கள் இவரையும் இயக்குனர் மாரி செல்வராஜ் அவரையும் பாராட்டி வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் 1995 இல் கொடியங்குளம் என்ற கிராமத்தில் காவல்துறையினர் கண்மூடித்தனமாக அந்த கிராமத்து மக்கள் மீது தடியடி நடத்தியதால் அந்த கிராமத்து கதையை வைத்து மாரி செல்வராஜ் இந்தத் திரைப்படத்தைத் தட்டித் தழுவி எடுத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ரசிகர்கள் அதிகம் பார்த்து பயந்தது என்னவென்றால் இதில் ரசிகர்களை பயமுறுத்தும் வகையில் ஒரு உருவம் அடிக்கடி வந்து கொண்டு இருக்கும்.இந்த உருவம் இந்த திரைப்படத்தில் படம் ஆரம்பத்திலிருந்து முடிவுக்கு வரும்வரை வந்து போய்க் கொண்டே இருக்கும்.
இந்த உருவம் எதற்காக வருகிறது என சினிமா பிரபலங்கள் பலரும் மட்டுமல்லாமல் ரசிகர்களும் சமூக வலைதளப் பக்கங்களில் பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள் இந்நிலையில் இந்த உருவம் எதற்கு வந்து போகிறது என ஒரு விடை கிடைத்துள்ளது.
அதாவது இந்த திரைப்படத்தின் இன்டொடக்சன் காட்சியில் ஒரு பெண் குழந்தை காக்கா வலிப்பு வந்து நடு ரோட்டில் விழுந்து கிடக்கும் போது ஒரு வாகனமும் நிற்காமல் போய்க்கொண்டே இருக்கும் ஏனென்றால் அந்த ஊரில் ஒரு வாகனம் கூட நிற்காது.
இதனால் அந்த பெண் குழந்தை இறந்துவிடும் இந்த சீனை மாரி செல்வராஜ் காலம் காலமாக ஒரு வீட்டில் திருமணம் ஆவதற்கு முன்பு ஒரு இளம் வயது பெண் இறந்து விட்டால் அந்தப் பெண் அந்த வீட்டிற்கு கண்ணி அம்மனாக அந்த வீட்டிற்கு காவல் தெய்வமாக தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருமாம்.
இந்த கலாச்சாரம் தற்போதும் கூட திருநெல்வேலி மாவட்டத்தில் காலம் காலமாக இருந்து வருகிறது என தகவல் கிடைத்துள்ளது இதனை வைத்துதான் மாரி செல்வராஜ் இந்த திரைப்படத்தில் அபூர்வமாக காட்டி இருப்பார்.
மேலும் அந்த கன்னிப் பெண் உருவத்தை நாம் கிராமத்து கோயில்களில் அதிகம் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இதை வைத்துதான் மாரி செல்வராஜ் படத்தை இயக்கினாரா என்று அவரை பாராட்டி வருகிறார்கள்.இதனையடுத்து இந்த தகவல் தற்போது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.