சிறுத்தை சிவா “அண்ணாத்த” திரைப்படத்திற்காக வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளியான மாஸ் தகவல்.

annathaa
annathaa

தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களை இயக்கிய இருந்தாலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தால் அசுர வளர்ச்சியை இயக்குனர் சிறுத்தை சிவா எட்டி உள்ளார். அவரது திரைப்படங்கள் பெரும்பாலும் தோல்வியை தழுவாமல் இருப்பதால் அவரை தலையில் தூக்கி வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக எடுத்த உடனேயே அஜித்தை வைத்து நான்கு திரைப்படங்களை இயக்கி மக்கள் மற்றும் ரசிகர்கள் தென்பட ஆரம்பித்தார். அந்த காரணத்தினாலேயே இவர் அசுர வளர்ச்சியை தமிழ் சினிமாவில் கண்டு உள்ளார். இப்போ ரஜினியுடன் இணையும் வாய்ப்பையும் கைப்பற்றினார் ஒருவழியாக அவருடன் இணைந்து “அண்ணாத்த”  படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மிகப்பெரிய ஒரு கூட்டம் நடித்து உள்ளது என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு இந்த படத்தில் பல நடிகர்கள் நடிகைகள் நடித்திருந்தாலும் சீரும் சிறப்புமாக அவர்களுக்கும் நல்ல ரோல் கொடுத்து எடுத்தது பெரிய விஷயம் என படக்குழுவை சேர்ந்த பலரும் கூறி வருகின்றனர் அந்த அளவிற்கு இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ், அபிமன்யு சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படமும் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளிவர இருக்கிறது அதற்கு முன்பாக ரஜினி, ரஜினியின் மகள் என அவரது குடும்பங்கள் திரைப்படத்தை பார்த்துவிட்டு மிக சூப்பராக இருப்பதாகவும் தெரிவித்தனர் மேலும் சிறுத்தை சிவா ரஜினியுடன் மேலும் ஒரு படம் பண்ண வேண்டும் என கூறி உள்ளனர் இதனால் படக்குழு தற்போது சந்தோஷத்தில் இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்திற்கு இயக்குனர் சிறுத்தை சிவா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதன்படி பார்கையில் அண்ணாத்த படத்திற்காக சிறுத்தை சிவா 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.