சின்னத்திரையில் டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க சன் டிவி ஜீ தமிழ் விஜய் டிவி போன்றவைகள் போட்டி போடுகின்றன. அதற்காக விஜய் டிவி பல்வேறு விதமான புதிய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை வெளியிட்டு அசத்தி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிக் பாஸ் சீசனை அறிமுகப்படுத்தியது.
இந்த நிகழ்ச்சி ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது தொடர்ந்து சீசன் சீசனாக நடந்து வருகிறது இதுவரை வெற்றிகரமாக ஐந்து சீசன்கள் முடிந்த நிலையில் ஆறாவது சீசன் வருகின்ற அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் தற்பொழுது தொடர்ந்து ப்ரோமோக்கள் மற்றும் லோகோ ஆகியவை வெளிவந்தது.
இதனால் பிக்பாஸ் 6 வது சீசன் எதிர்பார்ப்பு அதிகரிக்க வைத்துள்ளது பிக்பாஸ் சீசன் 6 யில் ஜிபி முத்து, ஷில்பா மஞ்சுநாத், விஜே ரக்சன், டிடி, பாடகி ராஜலக்ஷ்மி, நடிகை கிரண் உட்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாக பேசப்படுகிறது. ஆனால் இதுவரை விஜய் டிவி பிக்பாஸ் சைடில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை உலக நாயகன் தொகுத்து வழங்குவது உறுதியாகியுள்ளது இந்த நிலையில் அவர் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க எவ்வளவு சம்பளம் வாங்க இருக்கிறார் என்பது குறித்து தகவலும் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்காக அவர் 75 கோடி சம்பளம்..
பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ஏற்கனவே நடந்த பிக்பாஸ் சீசன் 5 காக உலகநாயகன் கமலஹாசன் 55 கோடி சம்பளம் வாங்கினார் என சொல்ல கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் இந்த செய்தி இணையதள பக்கத்தில் தற்போது தீயாய் பரவி வருகிறது.