தமிழ் சினிமாவில் நடிகராக தனது பயணத்தை தொடர்ந்து பின் படிப்படியாக இயக்குனராக மாறியவர் வெங்கட் பிரபு. இவர் சென்னை 600028 என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார் முதல் படமே சூப்பர்ஹிட் வெற்றி அடைந்தது. அதன்பின்பு அடுத்தடுத்த படங்களை இயக்கினார்.
அந்த வகையில் அஜித்தை வைத்து மங்காத்தா என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் வெங்கட் பிரபு. இந்த திரைப்படத்திற்கு அடுத்தது அவரது மார்க்கெட் தமிழ் சினிமாவில் அதிகரித்தது சமீபத்தில்கூட வெங்கட் பிரபு நடிகர் சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை கொடுத்து இருந்தார்.
இந்த படம் முழுக்க முழுக்க டைம் லூப்பை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது ஹாலிவுட் படங்களில் மட்டுமே இதுபோன்ற படங்களை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அதை தமிழ் சினிமா மக்களுக்கு புரியும்படி நடிகர் சிம்புவை வைத்து வேற லெவல் எடுத்துஅசத்தினார் மேலும் படம் வேறு இடங்களில் வெற்றி கண்டு வருகிறது.
மாநாடு திரை படத்தில் சிம்புவின் நடிப்பு போற்றும் வகையில் இருந்தது அதே போல இந்த திரைப்படத்தில் நடித்த மற்ற நடிகர்களின் நடிப்பும் வியக்க வைக்கும் வகையில் இருந்தது அந்த வகையில் எஸ் ஜே சூர்யா, ஒய்ஜி மகேந்திரன், எஸ். ஏ. சந்திரசேகர், மனோஜ், கருணாகரன், கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி போன்றவர்களும் சிறப்பாக நடித்து அசத்தினார்.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் இப்போதும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் குறித்து சம்பள விவரம் நாம் பார்த்து வந்தோம் தற்போது இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட்பிரபு இந்த படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு இந்த படத்திற்கு 4 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளிவருகின்றன.