நடிகர் தனுஷ் காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாக நடிப்பதையும் தாண்டி வாழ்ந்து காட்டுவது தான் அவரது ஸ்டைல் அதுவே அவரது வெற்றிக்கு பக்கபலமாக இருக்கிறது. நடிகர் தனுஷ் சிறந்த இயக்குனருடன் கைக்கோர்த்த நடித்த அனைத்து படமே பிளாக்பஸ்டர் படமாக மாறும்.
அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறனுடன் தனுஷ் பணியாற்றிய திரைப்படங்கள் அனைத்துமே மெகா ஹிட் படங்களாக தான் மாறியுள்ளன அந்த லிஸ்டில் இணைந்தது தான் அசுரன் திரைப்படமும் இந்த திரைப்படம் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது அசுரன் திரைப்படம் 2019ஆண்டு வெளியாகியது.
படம் செண்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் சிறப்பாக இருந்த காரணத்தினால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் இந்த திரைப்படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் இதில் தனுஷின் நடிப்பில் மிரட்டும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்தத் திரைப்படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது.
இத்திரைப் படத்தில் தனுஷுடன் இணைந்து ஆடுகளம் நரேன், பசுபதி, மஞ்சுவாரியர் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர். இந்த படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் 100 நாட்கள் ஓடி அசத்தியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படம் 100 நாட்கள் ஓடியது என்றால் அது தனுஷின் அசுரன் திரைப்படம் மட்டும் தான்.
இந்த திரைப்படத்தில் தனுஷ் நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வாங்கிய உள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் நடிகர் தனுஷ் இந்த திரைப்படத்திற்காக சுமார் 12 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது.