வெள்ளித்திரையில் தற்பொழுது உள்ள பல இயக்குனர்கள் வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படங்களை இயக்கி மக்களுக்கு கொடுத்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் ஒரு சில இயக்குனர்கள் திகிலில் மிரட்டும் படியாக காமெடி கலந்த பேய் கதைகளை உருவாக்கி மக்களிடையே வெற்றி கண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் பார்த்தால் காஞ்சனா,அரண்மனை,தில்லுக்கு துட்டு போன்ற பல திரைப்படங்கள் காமெடி கலந்து மக்களிடையே வெளியானதால் இந்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி விட்டது என்று தான் கூற வேண்டும்.
மேலும் தற்பொழுது உள்ள பல இயக்குனர்கள் இதே மாதிரி திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டு வருகிறார்கள் ஆனால் 80,90 காலக் கட்டங்களில் அதிகமாக இது போன்ற பேய் படங்களை இயக்கவில்லை ஆனாலும் ஒரு சில இயக்குனர்கள் மட்டும் இது போன்ற படங்களை இயக்கி மக்களிடையே வெற்றிக்கான வைத்துள்ளார்கள்.
அந்த கால கட்டங்களில் புது புது இயக்குனர்கள் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கி மக்களிடையே பிரபலமாகி வந்ததால் அதிகம் யாரும் திகிலில் மிரட்டும் படியாக திரைப்படங்களை இயக்கவில்லை இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஒரு திகில் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது என்றால் அது ஜெய்சங்கர் மற்றும் ஜெயலலிதா நடித்த யார் நீ திரைப்படம் தான்.
இந்த திரைப்படம் 1966 ஆம் ஆண்டு வெளியானது திகிலில் மிரட்டும் படியாக இந்த திரைப்படம் வெளியானதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடியது மட்டுமல்லாமல் மறைந்த ஜெயலலிதாவின் நினைவாக இவரது ரசிகர்கள் தற்போதும் இவர் நடித்த திரைப்படங்களை பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள்.
ஒரு சில ரசிகர்கள் யார் நீ என்ற திரைப்படம் எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது ஏனென்றால் அதில் எங்களுக்கு மிகவும் பிடித்த நடிகை ஜெயலலிதா நடித்ததால் தான் படம் சூப்பர் ஹிட்டாகி விட்டது என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.