எப்படியாவது தமிழில் நிறைய திரைப்படங்களை இயக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்கும் திரைப்படங்களை மிகவும் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி கதை வசனத்துடன் இயக்கி வருகிறார்.அந்த வகையில் பார்த்தால் இவரது இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் உருவாகி முடியப்போகும் நிலைமையில் இருக்கிறது என தகவல் கிடைத்துள்ளது.
இந்த திரைப்படத்தில் இவரது காதலியான நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி,சமந்தா போன்ற பல பிரபலங்கள் நடிப்பதால் இந்த திரைப்படத்தை மக்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா,விஜய் சேதுபதி போன்ற பிரபலங்கள் நடிப்பதால் இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விக்னேஷ் சிவன் புதிய கதையம்சம் கொண்டதாக இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறாராம்.
சமீபத்தில் கூட இந்த திரைப்படத்தில் இருந்து பேருந்தில் செல்லும் பொழுது எடுத்த காட்சி இணையத்தில் மிக வேகமாக வைரலானது அதேபோல் இந்த திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் முதல் பாடல் வெளியாகி ஏற்கனவே நல்ல வரவேற்ப்பை பெற்றது அனிருத் இசையில் உருவாகிவரும் அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் பிரபலம் அடையும் என பலரும் கூறி வருகிறார்கள்.
இதனைத்தொடர்ந்து இந்த திரைப்படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது வெளியாகும் என்பது பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது அதில் இந்த திரைப்படத்தில் இரண்டாவது சிங்கிள் பாடலில் முதல் வரி Two Two Two என்று ஆரம்பம் ஆகுமாம்.
இதனை வைத்து பார்த்த ரசிகர்கள் பலரும் அனிருத் இசையில் இந்த திரைப்படத்தில் இரண்டாவது சிங்கிள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை கடந்து செல்லப் போகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.மேலும் இந்த பாடல் வரும் 18ஆம் தேதி வெளியாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.