விவாகரத்து பெற்ற பின் “சமந்தா” நடிக்க போகும் முதல் படம் எது தெரியுமா.? எந்த மாதிரியான படத்தில் கமீட்டாகி உள்ளார் தெரியுமா.? வெளியான தகவல்.

samantha
samantha

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் தற்போது சகுந்தலம் மற்றும் காத்துவாக்குல 2 காதல் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதுவும் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் இவருடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கின்றனர்.

சமந்தா தற்போது ஒரே படத்தில் நயன்தாராவுடன் போட்டி போட்டுக் கொண்டு நடித்து வருகிறார் சினிமா உலகில் போட்டிபோட்டுக்கொண்டு செம சந்தோஷமாக இருந்து வருகிறார் ஆனால் நிஜ வாழ்க்கை தான் அவருக்கு பல பிரச்சனை மற்றும் சோகங்களை கொடுத்து உள்ளது.

ஆம் நடிகர் நாக சைதன்யாவை நான்கு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்ட  இவரும் திடீரென விவாகரத்து பெற்று பிரிந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது இருப்பினும் அதிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டு வர சமந்தா நிகழ்ச்சிகளில் கலந்து தலை காட்டி வந்த நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று நடிகை சமந்தா அடுத்த திரைப்படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியிருந்தது அதன்படி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் காந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ஒரு புதிய படம் உருவாக உள்ளது இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவர இருக்கின்றது.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஃபேன்டஸி ரொமான்டிக் திரைப்படமாக உருவாக உள்ளதாம். இதை அறிந்த ரசிகர்கள் நீங்கள் அடுத்த காட்டத்தை நோக்கி செல்வது நல்லது என கூறி வருகின்றனர். இச்செய்தி மேலும் இணையத் தளப்பக்கத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.