“புஷ்பா” திரைப்படம் தமிழகத்தில் மட்டும் அள்ளிய முதல் நாள் வசூல் எவ்வளவு கோடி தெரியுமா.?

puspa-
puspa-

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.  கடைசியாக  வைகுண்டபுரமலு என்ற திரைப்படத்தில் நடித்தார் அதுவும் சூப்பர் ஹிட்படமாக மாறியது. இப்போ சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள திரைப்படம் புஷ்பா.

இந்த படம் முழுக்க முழுக்க மலை மற்றும் காடுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் மையம் என்னவென்றால் செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

நேற்று இந்த திரைப்படம் கோலாகலமாக உலக அளவில் படம் வெளியாகியது மக்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. புஷ்பா திரைப்படம் தெலுங்கையும் தாண்டி மற்ற மொழிகளிலும் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தற்போது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கி வருகிறதாம்.

அதே போல தெலுங்கிலும் செம வேட்டை நடத்தி வருகிறதாம். காரணம் இந்த படத்தின் கதை சிறப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் வரும் பாடல்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதாம் அதிலும் நடிகை சமந்தா வரும் பாடல் வேற லெவல்.. ஸ்ரீதேவி பிரசாத் இந்த படத்தில் சிறப்பாக இசையமைப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படத்தில் வரும் காட்சிகள் அனைத்துமே தற்போது புது விதமாக மக்கள் ஒரு அனுபவத்தை கொடுப்பதால் படத்தை பார்க்க திரையரங்கம் மக்கள் கூட்டம் வந்தவண்ணமே இருக்கிறதாம். இப்படி இருக்கின்ற நிலையில் புஷ்பா படத்தின் முதல் நாள் வசூல் கலெக்சன் தமிழகத்தில் மட்டும் புஷ்பா திரைப்படம் சுமார் 4 கோடியே உள்ளது.