தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் பலரும் சோலோ படங்களில் நடித்து தன்னை வளர்த்துக் கொள்ள ஆசைப்படுவது வழக்கம் ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் அதை தூக்கி எறிந்து விட்டு ஒரே படங்களில் இரண்டு மூன்று நடிகர்கள் நடித்து படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக மாற்றுகின்றனர்
அந்த வகையில் நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் பிதாமகன் இந்த படம் சற்று வித்தியாசமாக இருந்தாலும் இதில் சூர்யா மற்றும் விக்ரமின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. இவர்களது காம்பினேஷன் மீண்டும் ஒருமுறை இருந்தால் சிறப்பாக இருக்கும் என கருதினர்
ஆனால் நிறைவேறாமலேயே போனது ஒரு கட்டத்தில் விக்ரம் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் இருவரும் நடிக்காமல் போய்விட்டனர். அது என்ன என்பது குறித்து தற்பொழுது பார்ப்போம்.
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்து திரைப்படம் காவிய தலைவன் இந்த படத்தின் கதைக்கு ஏற்றபடி இரண்டு நடிகர்கள் நடிக்க வேண்டும் அதற்க்கு முதலில் சூர்யா மற்றும் விக்ரமைதான் தேர்வு செய்துள்ளார் இயக்குனர்.
ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக நடிக்க முடியாமல் போக பின் சித்தார்த் மற்றும் பிரிதிவிராஜ் ஆகியோர் அந்த கதாபாத்திரத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் இவர்கள் மீண்டும் ஒரு நல்ல கதையில் இணைய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.