ரசிகரக்ளின் கனவு ராணி ராஷ்மிகா மந்தனாவின் குடும்ப பெயர் என்ன தெரியுமா.? வெளியான புகைப்படம்.

rashmika-mandan

கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்பு தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா . இவர் தெலுங்கில் வெளிவந்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் டியர் காம்ரேட் தேவதாஸ், பீஷ்மா போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். இப்படி கன்னடம் தெலுங்கு என இரு மொழிகளிலும் சிறப்பாக ஜொலித்து வந்த இவர் தமிழில் முதல் முறையாக கார்த்தியுடன் இணைந்து சுல்தான் திரைப்படத்தில் அறிமுகமானார்.

இந்த திரைப்படம் பெருமளவு வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் தமிழ் மக்களிடையே ராஷ்மிகா மந்தனா பிரபலம் அடைந்துள்ளார். மேலும் தமிழில் அடுத்த அடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி பல இயக்குனர்களிடம்  கதைகளை கேட்டு வருகிறார். நல்ல கதைகளம் அமைந்தால் கண்டிப்பாக இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்த வருவார்.

இவர் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து புஷ்பா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி ட்ரென்ட் ஆகியது. இதனைத் தொடர்ந்து இவர்  ஹிந்தியிலும் மிஷன் மஜ்னு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

rashmika mandanna
rashmika mandanna

இப்படி தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவின் பலருக்கும் தெரியாத ரகசியம்  ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகியது. அது என்னவென்றால் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் குடும்பப் பெயர் முண்ட சதிரா என்பதாம். இவர் அவரது பாஸ்போர்ட்டில் இந்த குடும்ப பெயரையும் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.