வெள்ளித்திரையில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் விஜய் இவர் சென்ற வருடம் நடித்த பிகில் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் அதிக வசூல் அளித்தது என்பது பலருக்கும் தெரியும்.
மேலும் தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதமே வெளியாகியிருக்க வேண்டும் ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக படம் வெளியாகவில்லை.
இதனையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து ட்ரெண்டிங் ஆனதை நாம் பார்த்தோம்.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி எப்பொழுது என்று கேட்டால் அடுத்த வருடம் ஜனவரி 13ம் தேதி தான் உறுதியாகியுள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும் மாஸ்டர் திரைப்படம் ஆயிரம் திரையரங்குகளில் குறையாமல் வெளியாக உள்ளதாம்.
இதைதொடர்ந்து விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை இந்த படம் பெற்று அதிக வசூல் கிடைக்கும் என படக்குழுவினர்கள் நம்பி வருகிறார்கள் ஆனால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுமா, பெறாத என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.