தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லி.இவர் தற்பொழுது விஜய் வைத்து சில படங்களை இயக்கி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
அந்தவகையில் இறுதியாக மெர்சல் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்நிலையில் தற்போது அட்லி தமிழில் தளபதி விஜய்யை வைத்து மெர்சல் படத்தை இயக்கியது போல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து இப்படத்தை இயக்குவதற்காக தயாராகி வருகிறாராம். கிட்டத்தட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவதற்கு இரண்டு வருடங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்திற்காக அட்லி எவ்வளவு சம்பளம் வாங்க உள்ளார் என்பதை என்பதை பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அட்லிக்கு முதலில் 40 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறப்பட்ட நிலையில் இறுதியாக 35 கோடி உறுதியாகி உள்ளதாம்.
இவர் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான காலகட்டத்தில் இயக்குனர் சங்கரின் துணை இயக்குனராக தான் பணியாற்றி வந்தார். அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் அதிகபட்சமாக 25 கோடி ரூபாய் தான் சம்பளம் வாங்குவார். இந்த நிலையில் பாலிவுட் மூலம் அட்லி குருவையே மிஞ்சி 10 கோடி அதிகமாக சம்பளம் வாங்குகிறார்.
இதனை அறிந்த அட்லியின் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்து வந்தாலும் சினிமா பிரபலங்களுக்கு அதிர்ச்சி அளிக்கின்றது.தற்போது இந்த தகவல் தீயாய் பரவி வருகிறது.