சில நாட்களுக்கு முன்பு தீபாவளியை முன்னிட்டு இணையதளம் வழியாக வெளியான திரைப்படம் தான் ஜெய்பீம் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது நமக்கு தெரிந்த விஷயம்.குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் இந்த திரைப்படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் உண்மையாகவே நடந்தது என்பதும் குறிப்பிட தக்கது.
இருளர் சமுதாயத்தை சேர்ந்த மக்களை காவல்துறையினர் தங்கள் விருப்பப்படி கொடுமை செய்துள்ள நிகழ்வால் பலரும் தற்பொழுது இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு மனம் வருந்துகிறார்கள் குறிப்பாகக் கூற வேண்டுமென்றால் பழங்குடி மக்களின் வாழ்க்கை குறித்து உண்மையாகவே நடந்த கதைதான் இந்த ஜெய் பீம்.
மேலும் இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ராசகண்ணு மனைவிக்கு உண்மையாகவே நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு புதிய வீட்டை கட்டிக் கொடுப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார் அதேபோல் பல சினிமா பிரபலங்களும் இந்த திரைப்படத்தை பார்த்து மனம் வருந்தி விட்டார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு ஒரு சில பிரபலங்கள் உண்மையான செங்கேணியின் வீட்டுக்கு சென்று அவரது வறுமை நிலையை பார்த்துவிட்டு அவருக்கு ஆறுதலும் கூறிவந்தார்கள் கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயர சம்பவம் என்றால் ராசகண்ணு மனைவி செங்கேணிக்கு நடந்திருக்கும்.
இந்நிலையில் உண்மையான செங்கேணி வாழ்ந்துவரும் வீட்டின் புகைப்படம் தற்போது கிடைத்துள்ளது இந்தப் புகைப்படத்தை பார்க்கும் பொழுதே இவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்கவே கூடாது என பல ரசிகர்களும் கூறி இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.