தற்போது திரை உலகில் இருக்கும் பல்வேறு முன்னணி நடிகர்களும் வருடத்திற்கு இரண்டு திரைப்படங்களுக்கும் மேலாக நடித்து வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் இரண்டு வருடங்களாக ஒரே திரைப்படத்தில் நடித்து வரும் கதாநாயகன் தான் தல அஜித் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஆவார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கடந்த 2019ஆம் ஆண்டு விஸ்வாசம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் சாதனை படைத்தது ஆனால் இந்த திரைப்படத்திற்கு பிறகு தல அஜித் ஏதேனும் திரைப்படத்தில் நடித்தார் என்றால் அது கிடையாது.
அதன்பிறகு வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் வலிமை இந்த திரைப்படமானது சுமார் இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்தது மட்டுமில்லாமல் சமீபத்தில்தான் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்தது.
இந்நிலையில் இத்திரைப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என நினைத்திருந்த நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம் தற்போது இத்திரைப்படமானது பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியில் தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன இவ்வாறு உருவாகும் இந்த கூட்டணி ஆனது மூன்றாவது முறையாக இணைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக தல அஜித் தான் நடிக்கும் திரைப்படத்தின் இயக்குனர் உடன் சுமார் மூன்று திரைப்படங்களில் ஒன்றாக நடிப்பது வழக்கம் தான் எடுத்துக்காட்டாக சிவா இயக்கத்தில் கூட வீரம் விவேகம் விவேகம் விசுவாசம் என பல திரைப்படத்தில் நடித்திருந்தார் அதேபோல தற்போது வினோத் இயக்கத்தில் தொடர்ந்து நடிக்க உள்ளார்.
தற்போது தல அஜித்தின் 61 ஆவது திரைப்படத்தில் இசையமைப்பாளராக இளம் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் தேர்வாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுவாக அனிருத் இசையமைக்கும் இசையில் நடிகர்களின் பிஜிஎம் மிக பிரம்மாண்டமாக இருப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களை வெகுவாக இவருடைய இசைக்க வந்துவிடும். இந்நிலையில் இவர் அஜித்துடன் இணைவது காரணமாக இந்த திரைப்படத்தில் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உயர்ந்துள்ளது.