Jailer : சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் தெரியும் எப்பொழுதுமே வெற்றி கொடுக்க முடியாது என்று.. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்தாலும் கடைசியாக இவர் நடித்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் பெரும் சறுக்களை சந்தித்தன.
இதனால் அவருடைய மார்க்கெட் விழுந்து விட்டது என பலரும் கமெண்ட் அடித்தனர் இதற்கு பதிலடி கொடுக்க இளம் இயக்குனர் நெல்சன் உடன் கைகோர்த்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்தார். ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவந்து மாபெரும் வெற்றி நடை கண்டு வருகிறது. இதுவரை மட்டுமே 550 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது.
வருகின்ற நாட்களில் எந்த ஒரு பெரிய படமும் இல்லாததால் ஜெயிலர் படத்தின் வசூல் வேட்டையை தடுக்க முடியாது என தனித்து உள்ளனர். ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் 200 கோடி பட்ஜெட்டில் எடுத்தது ஆனால் எதிர்பார்த்ததை விட தற்பொழுது லாபம் வந்து கொண்டே இருப்பதால் தயாரிப்பு நிறுவனம் சந்தோஷமடைந்துள்ளது.
Mr. Kalanithi Maran met Superstar @rajinikanth and handed over a cheque, celebrating the historic success of #Jailer pic.twitter.com/Y1wp2ugbdi
— Sun Pictures (@sunpictures) August 31, 2023
இதனை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து செக் ஒன்றை நேற்று கொடுத்திருந்தார் இது அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்த நிலையில் அந்த செக்கில் இருந்த அமௌன்ட் குறித்து தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது. திரைப்பட வர்த்தக நிபுணர் மனோபாலா விஜயபாலன் X வலைதள பக்கத்தில் இது குறித்து பகர்ந்துள்ளார்.
Info coming in that, the envelope handed over by Kalanithi Maran to superstar #rajinikanth contains a single cheque amounting ₹1⃣0⃣0⃣ cr from City Union Bank, Mandaveli branch, Chennai.
This is a #Jailer profit sharing cheque which is up & above the already paid… pic.twitter.com/I6TF6p4SvL
— Manobala Vijayabalan (@ManobalaV) August 31, 2023
ஜெயிலர் படம் லாபத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக 100 கோடிக்காண காசோலையை பகிர்ந்து கொண்டார் ஜெயிலர் படத்திற்காக ரஜினி 110 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது தற்பொழுது 100 கோடி கொடுக்கப்பட்டுள்ளது மொத்தமாக 210 கோடி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்க நடிகராக மாறி உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.