சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார் இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்தா என்ற படத்தில் நடித்து வருகிறார் இவருடன் இணைந்து நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்திசுரேஷ் போன்ற பல நட்சத்திரங்கள் பட்டாளமே இவருடன் சேர்ந்து நடித்து வருகிறார்கள்.
மேலும் இன்று இவரது 70 ஆவது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்கள் வீடியோக்கள் என அனைத்தையும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவது மட்டுமல்லாமல் எங்கு பார்த்தாலும் ரஜினியின் கட்டோட் பேனர் போன்ற விஷயங்கள் தான் நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் சினிமா பிரபலங்கள் பலரும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு அவருக்காக பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறும் வகையில் ட்வீட் போட்டு பகிர்ந்து வருகிறார்கள்.
ஒரு சில பிரபலங்கள் ரஜினியை தொலைபேசி மூலம் அழைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள் அந்த வகையில் தயாரிப்பாளரும் நடிகருமான தயாநிதியின் அப்பாவும் திமுகாவைச் சேர்ந்த அழகிரி ரஜினியை தொலைபேசி மூலம் அழைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறாராம்.
இந்த தகவல் இணையதளத்தில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.