ஒரு கிலோ கோதுமை கொடுத்தற்காக அமீர்கானை வாழ்த்திய பிரபலங்கள் எதற்காக தெரியுமா.?விவரம் இதோ.!

aamir-khan

Actor Aamir Khan for giving poor people  a kilo of wheat?கொரோனா வைரஸினால் உலக நாடுகள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோல தற்பொழுது இந்தியாவிலும் அதனுடைய ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்று கூறவேண்டும். இதையடுத்து இந்திய அரசாங்கம் எச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த உத்தரவு மே மாதம் மூன்றாம் தேதி வரை நீடிக்கும் என மத்திய மாநில அரசுகள் இரண்டாம்கட்ட அறிவிப்பு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூலி வேலை செய்து வருபவர்கள், ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படுபவர்கள்  தனது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். இதனை உணர்ந்த இந்திய அரசாங்கம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தாலும் ஒரு புறம் சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள்என பலர் நிதி உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் ஹாலிவுட் நடிகர்கள் பலர் நிதி உதவிகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அமிதாப் பச்சன் திரையுலகைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை கொடுத்துள்ளார். இவரைப்போல சல்மான்கான் மற்றும் பலர் நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அமீர்கான் அவர்கள் ஒரு கிலோ பாக்கெட் கோதுமையை கொடுத்துள்ளார். இதனை ஊடகங்கள் மற்றும் பிரபலங்கள் பலர் அமீர்கானை விமர்சித்தனர். ஆனால் அந்த ஒரு கிலோ கோதுமை பாக்கெட்டில் இருந்தது  15,000 ரூபாய் பணம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

amir
amir

இதை வாங்கிய ஏழை மக்களுக்கு கூட தெரியாது. ஒரு கிலோ கோதுமை வாங்குவதற்கு வசதியானவர்கள் வரவில்லை. ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் மற்றும் முடியாதவர்கள் மட்டுமே இந்த ஒரு கிலோ கோதுமை இருந்தால் போதும் என வாங்க வந்தவர்களுக்கு மட்டுமே இது வழங்கப்பட்டது. அமீர்கான் யாருக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார் அவர்களுக்கு மிக சிறப்பாக சென்றடைந்தது என அவரது தரப்பில் தெரிவித்தனர்.