Nayanthara : தற்பொழுது நயன்தாரா மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை இயக்குனர் சரவணன்னோடு இணைந்து ஆர்.ஜே பாலாஜி யும் இயக்கியுள்ளார் இப்படத்திற்காக இசையமைப்பாளர் க்ரிஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படம் தீபாவளியை முன்னிட்டு OTT மற்றும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் மற்றும் லாபம் பற்றி இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
மூக்குத்தி அம்மன் திரைப்படம் மொத்த பட்ஜெட் 12 கோடி அளவில் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் நயன்தாராவுக்கு 6 கோடி ஜி.எஸ்டி உட்பட கொடுத்துள்ளார்கள்.
இதனை அடுத்த மற்றும் படத்தில் பணியாற்றியுள்ள மொத்த படக்குழுவினர் மற்றும் படத்தின் பிரமோஷன் செலவுகள் உட்பட 12 கோடி செலவாகியுள்ளது.
இந்த படத்தை ஹிந்தி டப்பிங்ல் 1.5 கோடிக்கு விற்றுள்ளார்கள் மேலும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சார்பில் டிஸ்னி பிளஸ் ஹாஸ்டார் நிறுவனம் 18 கோடிக்கு மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை வாங்கி உளளார்கள்.
12 கோடி செலவில் உருவாக்கப்பட்டு டிஸ்னி பிளஸ் ஹாஸ்டார் 18 கோடி மற்றும் ஹிந்தி டப்ங் என மொத்தம் 7.5 கோடிகள் இப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபம் கிடைத்துள்ளது.