நடிகர் விஜய் அணிந்திருக்கும் செருப்பின் பிராண்ட் என்ன தெரியுமா.? அடேங்கப்பா விலை இவ்வளவு.?

vijay-01

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் பல ஆண்டு காலங்களாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது தற்பொழுது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்துள்ளார்.

வம்சி தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த படத்தினை தில்ராஜ் தயாரித்துள்ள நிலையில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வாரிசு திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ்ராஜ், நாசர் ,பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பூ உள்ளிட்ட ஏராளமான முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் விரைவில் வாரிசு திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் அடிக்கடி தொண்டர்களை சந்தித்து வருகிறார் விஜய் கடந்த மாதம் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களையும் தொண்டர்களையும் கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்து இருந்தார். எனவே நடிகர் விஜயை காண வேண்டும் என்பதற்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் ரசிகர்கள் வந்திருந்தார்கள்.

இவ்வாறு திடீரென விஜய் ரசிகர்களை சந்தித்த நிலையில் அரசியல்வாதிகளின் மத்தியில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது இப்படிப்பட்ட நிலையில் இன்றைய தினம் இரண்டாவது கட்டமாக ரசிகர்களை நடிகர் விஜய் சந்தித்து இருக்கிறார் அலுவலகத்தில் ரசிகர்களுக்கு தடபுடலாக பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. அதேபோல் இந்த சந்திப்பில் வாரிசு படத்தை வெளி மாவட்டங்களில் மக்களிடம் கொண்டு சேர்க்க என்னென்ன விளம்பர யுத்திகளை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த முக்கிய ஆலோசனை நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

vijay
vijay

மேலும் விஜயுடன் ரசிகர்கள் பலரும் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிலையில் அதில் மாற்றுத்திறனாளி ரசிகர் எடுக்க முன் வந்தார் அப்பொழுது அந்த ரசிகரை தனது கையில் தூக்கிக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார் அந்த புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் அந்த புகைப்படம் வைரலான நிலையில் விஜய் அணிந்திருக்கும் செருப்பின் விலை பலரையும் மேலும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது நடிகர் விஜய் அறிந்திருக்கும் செருப்பு Birkenstock என்ற நிறுவனத்துடையது Mayari Birko என்ற மாடல் காலனி மேலும் அதன் விலை 5,999 ரூபாய் என சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது மேலும் அந்த காலணியின் புகைப்படமும் வைரலாகி வருகிறது.