சினிமா உலகில் சமீபகாலமாக டாப் நடிகர்கள் படங்கள் வெளிவந்து நாம் எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் வேட்டை நடத்துகின்றனர் அதிலும் முதல் நாள் வேற லெவலில் வசூல் வேட்டை நடத்தும். அதுபோல இப்போ சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் நேற்று திரையரங்கில் கோலாகலமாக வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் புஷ்பா.
இதுவரை அவர் போடாத கதாபாத்திரத்தை முதல்முறையாக தேர்ந்தெடுத்த நடித்துள்ளார் அல்லு அர்ஜுன் அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு படம் வெளிவருவதற்கு முன்பாகவே உச்சத்தில் இருந்தது மேலும் இந்த படத்தில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பல்வேறு டாப் நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப் படத்தில் நடித்தவர்கள் ஒரு கதாபாத்திரமும் வித்தியாசமாகவும் அதேசமயம் வியக்க வைக்கும் வகையில் இருந்தது.
அதனால் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் படத்திற்கான அலைகள் நன்றாகவே வீசின. படக்குழு தெலுங்கில் மட்டும் இந்த படத்தை வெளியிடாமல் ஐந்து மொழிகளில் வெளியீட்டு அசத்தியது. படம் வெளிவருவதற்கு முன்பாக ஒரு சில பிரச்சனைகளை சந்தித்தாலும் அதை எல்லாம் தாண்டி வெளிவந்து தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நேற்று மற்றும் இந்திய அளவில் புஷ்பா திரைப்படம் எவ்வளவு கோடி அள்ளி உள்ளது என்பது குறித்த தகவல் ஒன்று இணையதளத்தில் உலா வருகிறது அதன்படி பார்க்கையில் புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் மட்டுமே சுமார் 71 கோடியை அள்ளிய உள்ளதாக கூறப்படுகிறது.
அதனை உறுதிபடுத்தும் வகையில் புஷ்பா திரைப்படத்தை தயாரித்த மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கன்ஃபார்ம் பண்ணி உள்ளது. முதல் நாள் மட்டுமே 71 கோடி என்பதால் இன்னும் வருகின்ற நாட்களில் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தி அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.