நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” படம் 3 நாட்களில் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா.? ஷாக்கான ரசிகர்கள்.

vishal
vishal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் ஆரம்பத்தில் தொடர்ந்து ஆக்ஷன் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் சிறப்பான படங்களை கொடுத்தவர் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம் அடைந்த பிறகு தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக இவர் நடித்த படங்கள் பெரும் தோல்வியை தழுவிய நிலையில் மீண்டும் ஒரு ஆக்ஷன் படமான வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் ஒரு வழியாக திரையரங்கில் வெளியாகி வெற்றி கண்டு வருகிறது. வீரமே வாகை சூடும் திரைப்படத்தை இளம் இயக்குனர் து பா சரவணன் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து ரவீனா ரவி, யோகி பாபு, டெம்பிள் கயாதி மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் பலர் நடித்து அசத்தி  உள்ளனர். பல்வேறு பிரச்சனைகளை தாண்டி ஒருவழியாக வீரமே வாகை சூடும் திரைப்படம் பிப்ரவரி 4-ஆம் தேதி திரையரங்கில் கோலாகலமாக வெளியாகியது.

இந்த திரைப்படம்  விஷால் கேரியரில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் படம் சுமாராகவே இருப்பதாக பல்வேறு கமெண்ட்டுகள் வெளிவருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் வீரமே வாகை சூடும் திரைப்படம் மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் செய்தது என்பது  குறித்து விலாவாரியாக பார்க்க இருக்கிறோம்.

வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 20 கோடி ஆனால் மூன்று நாட்களில் வீரம் திரைப்படம் வெறும் 5 கோடி என கூறப்படுகிறது. மூன்று நாட்களில் 5 கோடி என்பது மிக கம்மி  சொல்லப்போனால் நஷ்டத்தில் தான் வீரமே வாவை சூடும் திரைப்படம் இருந்துள்ளது.