தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து நடித்த திரைப்படம் என்றால் அது உல்லாசம் திரைப்படம் தான். இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை மகேஸ்வரி.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை யார் என்ற கேள்வியும் அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வியும் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் முன்வைத்து உள்ளார்கள் நடிகை மகேஸ்வரியின் குடும்பத்திலுள்ள அனைவருமே திரை உலகைச் சேர்ந்தவர்கள்.
அதுமட்டுமில்லாமல் மகேஸ்வரி பேரழகி ஸ்ரீதேவியின் சித்தி மகள் ஆவார் இவர் திரையில் முதன் முதலாக 1994ஆம் ஆண்டு வெளிவந்த க்ரண்டிவீர் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் கருத்தம்மா என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து திரையில் பிரபலமாக வலம் வருவார் என்று நினைத்த நிலையில் அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் வரவில்லை மேலும் மகேஸ்வரி தமிழ் தெலுங்கு கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் 40 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.
பொதுவாக சினிமாவில் இருக்கும் கதாநாயகிகள் ஒரு பதினைந்து திரைப்படம் நடிப்பது மிகவும் கடினமான விஷயம் அந்த வகையில் 40 திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம் தான்.
பொதுவாக நடிகைகள் தன்னுடைய மவுசு குறையும் நிலையில் சீரியலில் வருவது வழக்கம்தான் தற்போது நமது நடிகையும் சின்னத்திரை சீரியலில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இதனைத் தொடர்ந்து அதே கண்கள் என்ற சீரியலில் தற்போது மகேஸ்வரி நடித்து வருகிறார்.