“பொன்னியின் செல்வன்” படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த 5 நடிகர், நடிகைகள் யார் தெரியுமா.? இப்படி ஒரு வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாங்களே..

ponniyin-selvan
ponniyin-selvan

சினிமா உலகைப் பொறுத்தவரை எப்பொழுதும் வரலாற்று திரைப்படங்களுக்கு நல்ல மதிப்பு இருந்து வருகிறது. மக்கள் மற்றும் ரசிகர்களும் வரலாற்று படத்தை ஆர்வமாக பார்த்து வருகின்றனர் சொல்லப்போனால் வரலாற்று திரைப்படங்கள் பெரும்பாலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியை ஏற்பட்டுள்ளன.

அந்த வகையில் சமீபகாலமாக நாவலைத் தழுவி பல்வேறு படங்களை எடுத்து அசத்தி வருபவர் இயக்குனர் மணிரத்தினம் இப்பொழுதுகூட இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று கதையை தனது கனவு படமாக எடுத்து வருகிறார் இந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கிறார் முதல் பாகத்தின்  படப்பிடிப்பு தற்போது மெல்ல மெல்ல முடிந்து. ஒரு வழியாக டப்பிங் பணிகளை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

மணிரத்தினம் இந்தப் படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர் நடிகைகளை தேர்வு செய்து உள்ளார் இந்த படத்தில் இப்பொழுது கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், விக்ரம்,ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், திரிஷா மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் பலர் நடித்துள்ளனர். இருக்கின்ற நிலையில் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னின் செல்வன் முதல் பாகத்தில் முதலில் நடிக்க 5 டாப் நடிகர், நடிகைகளை படத்தின் கதைக்கு ஏற்றவாறு தேர்வு செய்து.

அவர்களுக்கும் பயிற்சி எல்லாம் கொடுத்துள்ளார் இருப்பினும் அவர்கள் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனதாம். அவர்கள் யார் யார் என்பது லிஸ்ட் வழியாக பார்ப்போம் முதலில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், சத்யராஜ், அனுஷ்கா ஷெட்டி போன்றோர் முதலில் நடிக்க மணிரத்தினம் செலக்ட் செய்து இருந்தார்.

இருப்பினும் சில காரணங்களால் இவர்கள் இந்த படத்தை கைவிடவே வேறு வழியில்லாமல் மற்ற திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து வந்துள்ளாராம். அனுஷ்கா ஷெட்டி கதாபாத்திரத்தில் தான் இப்பொழுது நடிகை திரிஷா நடித்து வருவதாக கூறப்படுகிறது.