வலிமைக்கு பிறகு தல அஜித் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் தெரியுமா..? இணையத்தில் லீககான லேட்டஸ்ட் அப்டேட்..!

thala-61
thala-61

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தல அஜித் இவரை  திரை உலகில் மாஸ் நடிகர் என்றும் அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். பொதுவாக நடிகர் அஜித் சினிமாவில் எந்த ஒரு பக்க பலமும் இன்றி தானாக முயற்சித்து முன்னுக்கு வந்தவர்.

இவ்வாறு நமது தல அஜித் பிரேம புஸ்தகம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையில் முகம் காட்ட ஆரம்பித்தார் இதனை தொடர்ந்து தமிழில் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் என்ற அந்தஸ்தைப் பெற்ற நமது நடிகர் அதன்பின்னர்தான் கால்வைத்த இடமெல்லாம் பெயரையும் புகழையும் சம்பாதிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமும் மன்றமும் இருந்த நிலையில் தன்னுடைய 50-வது திரைப்படமான மங்காத்தா திரைப்படம் வெளிவந்தபோது என்னுடைய சுயநலத்திற்காக நான் என்னுடைய ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என தனக்காக உருவாக்கப்பட்ட ரசிகர் மன்றத்தையும் கலைத்துவிட்டார்.

ஆனால் ரசிகர் மன்றம் கலைந்த பிறகு 100 கோடிக்கு மேல் மங்காத்தா திரைப்படத்தில் வசூல் செய்து மாபெரும் சாதனையை செய்தார். இந்நிலையில் நமது தல அஜித் போனி கபூர் தயாரிப்பில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார் இத்திரைப்படத்தை வினோத் அவர்கள் தான் இயக்கி வருகிறார்.

மேலும் இதில் தல அஜித்திற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி என்பவர் நடித்து வருகிறார். இவ்வாறு இந்த திரைப்படமானது இந்த ஆண்டு தீபாவளிக்கு கண்டிப்பாக வெளிவரும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு பிறகு தல அஜித் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வியை ரசிகர்களிடம் பெரும் அளவில் பரவியுள்ளது.

இந்நிலையில் மறுபடியும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.  அதுமட்டுமில்லாமல் வலிமை திரைப்படத்தை தயாரிக்கும் போனிகபூர் தான் இந்த திரைபடத்தையும் தயாரிக்க உள்ளாராம்.

vinoth
vinoth