திரையரங்குகளில் வெளியாகும் டாக்டர் திரைப்படம் அதுவும் எந்த மாதத்தில் தெரியுமா.? இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

sivakarthikeyan
sivakarthikeyan

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து பின்பு வெள்ளித்திரையில் காமெடி நடிகராக களம் இறங்கி தற்போது கதாநாயகனாக வலம் வரும் நடிகர் தான் சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான் அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு நண்பனாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தற்போது கதாநாயகனாக பலதிரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

இவர் கதாநாயகனாக நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் இவரது நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது இவரது நடிப்பில் மிரட்டலாக உருவாகியுள்ள திரைப்படம் தான் டாக்டர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார்.

மேலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள்மோகன் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் ஒரு சில காரணங்கள் குறித்து வெளியாகவில்லை சமீபத்தில் கூட இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் தான் வெளியாக இருக்கிறது.

என தகவல் வைரலானதை நாம் பார்த்திருப்போம் ஆனால் தற்போது 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அரசு உத்தரவிட்டதால் இந்த திரைப்படமும் திரையரங்குகளில் தான் வெளியாக இருக்கிறது என இந்த திரைப்படத்தை தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.

ஆம் இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளதால் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இதனை தற்பொழுது கொண்டாடி வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் சிவகார்த்திகேயன் நடிக்கும் நிறைய திரைப்படங்களை எதிர்பார்த்து வருகிறார்கள்.