இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்த்த தளபதி விஜய் – எந்த படத்தில் தெரியுமா.? வெளியவரும் உண்மை. .

vijay
vijay

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு இந்த படம் வருகின்ற பொங்கலுக்கு கோலாகலமாக ரிலீஸ் ஆக உள்ளது அதற்கு முன்பாக வாரிசு பணத்தின் அப்டேட்டுகளை கொடுக்க இருக்கிறது. ஆரம்பத்தில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு அசத்தியது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு விஜய் கையில் சுத்தியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. வாரிசு திரைப்படம் ஒரு சென்டிமென்ட் திரைப்படமாக உருவாகி இருந்தாலும் இந்த படத்தில் ஆக்சன் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை விஜய் வெற்றிகரமாக முடிந்து விட்டு அடுத்ததாக இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து தனது 67 வது படத்தில் நடிக்க இருக்கிறார். தளபதி 67 படத்தின் ஷூட்டிங் வருகின்ற டிசம்பர் மாசம் கோலாகலமாக தொடங்கும் என தெரிய வருகிறது இந்த நிலையில் தளபதி 67 படத்தில் இருந்து பல்வேறு தகவல்கள் வெளி வருகின்றன.

அதாவது தளபதி 67 திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் மேலும் இந்த படத்தில் விஜய் எதிரியாக ஐந்தாறு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. மேலும் இந்த படத்தில் சமந்தா திரிஷா போன்றவர்களும் ஒரு முக்கிய கதாபாத்திரங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளி வருகின்றன.

இந்த சமயத்தில் பிரபல இயக்குனர் தளபதியை 67 படத்தில் இணைந்து நடிக்கயுள்ளார். அந்த இயக்குனர் வேறு யாரும் அல்ல மிஷ்கின் தான் என கூறப்படுகிறது. தளபதி 67 படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது மட்டும் தெரியவில்லை ஆனால் இந்த தகவல் தற்போது தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.